செடி-கொடிகளை அகற்றி மின்விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2022-12-04 11:18 GMT

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் சின்ன கோடங்குடியில் இருந்து பெரிய கோடங்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமானோர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்த சாலையின் இரண்டு பக்கமும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்றி, மின்விளக்கு அமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி