நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருவாரூர் நகருக்குள் வருவதற்கு மடப்புரம் என்ற இடத்தில் ஓடம்போக்கியாற்றின் குறுக்கே குறுகிய பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த பாலத்தின் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த பாலம் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபயகரமான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டித்தர உரிய நடவடிக்கைஎடுப்பார்களா?