தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் ரெயில் நிலையம் முதல் மகாமக குளம் அருகில் உள்ள மணிக்கூண்டு வரை காமராசர் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் போக்கு வரத்து அதிகம் இருக்கும். அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்யாணசுந்தரம்,கும்பகோணம்.