தஞ்சாவூர் வட்டம் பிள்ளையார்பட்டி கிராமம் மருத்துவக்கல்லூரி சாலையில் அமையப்பெற்றுள்ள தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் சாலையில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் மேடு பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெ. குருமூர்த்தி, பிள்ளையார்பட்டி