தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பருத்திக்கோட்டை ஊராட்சி உப்பாங்கரை கிராமத்தில் பெரியகுளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த குளத்திற்கு அதன் அருகில் உள்ள வாய்க்கால் மூலம் தண்ணீர் வருகிறது. விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டுமானால் இந்த வாய்க்காலில் இறங்கி தான் செல்ல வேண்டும். மேலும் வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை மூட்டை கட்டி தலையில் சுமந்து கரைக்கு கொண்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வயல் பகுதிக்கு செல்ல பாலம் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.