தஞ்சையில் இருந்து நாஞ்சிக்கோட்டை செல்லும் சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் மேரிஸ்கார்னர் மேம்பாலத்தின் கீழ் பகுதி மற்றும் அந்த சாலையில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த பள்ளங்களை கற்கள் நிறைந்த மணல்களை கொண்டு நிரப்பி உள்ளனர். ஆனால் மணல்கள் பள்ளத்தில் இருந்து வெளியேறி அபாய பள்ளம் போல் காட்சி அளிக்கிறது. மழைக்காலத்தில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பள்ளங்கள் இருப்பது தெரியாததால், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தரவேண்டும்.