குமராட்சி அருகே கீழநெடும்பூர் கிராமத்தில் உள்ள மேலத்தெருவில் சுமார் 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால், அவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லை. இதனால் வயல்வெளி பகுதி வழியாக உடல்களை எடுத்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகி்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.