அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள அறக்கட்டளை கிராமத்தில் வசிக்கும் மக்கள் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளுக்கு செல்ல அறக்கட்டளையில் இருந்து கடம்பூர் வரை செல்லும் சாலை மற்றும் அறக்கட்டளையில் இருந்து குணமங்கலம் வரை செல்லும் சாலை ஆகிய இரு சாலைகளும் பல வருடங்களுக்கு முன்பு தார் சாலையாக போடப்பட்டது. தற்போது இந்த சாலைகள் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.