கரூர் மாவட்டம், குளித்தலை பஸ் நிலையத்திற்கு உள்ளே வரும் சாலை மற்றும் பஸ் நிலையத்தில் பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. குண்டும், குழியுமான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் வாகனங்களின் பாகங்கள் சேதமடைந்து அதனால் வாகன ஓட்டிகளுக்கு கணிசமான தொகை செலவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இந்த குழிகளை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.