சின்னாளப்பட்டி அருகே மேட்டுப்பட்டியில் 1, 2-வது தெருக்களில் சிமெண்டு சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்கி பாதைகள் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே மேட்டுப்பட்டியில் தெருக்களில் சிமெண்டு சாலைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.