கடலூர் மாவட்டம் கட்டியநல்லூர் பகுதியில் சாலை, குடிநீர் மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய வசதிகள் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் தினசரி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கட்டியநல்லூர் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.