உடன்குடி பேரூராட்சி 8-வது வார்டு சமத்துவபுரத்துக்கு செல்லும் வழியில் புதிய சாலை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக பழைய சாலையை ெபாக்லைன் எந்திரம் மூலம் தோண்டி அகற்றி விட்டு, ஜல்லி கற்களை நிரப்பி சமதளப்படுத்தினர். பின்னர் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.