தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு எண் 3-ல் அன்பழகன் நகர் விரிவாக்க பகுதியில் ஏராளமானோர் வசிக்கின்றன. இந்த பகுதியில் உள்ள மண்சாலையும் சேதடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போதுமழை பெய்து வருவதால் மேடு, பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதரிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராகவேந்திரா தாசன், தஞ்சை