தஞ்சை-நாகை சாலையில் சோழன் நகர் அருகே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாமல் மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது.. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகிறார்கள. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை