போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-07-16 11:23 GMT
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே செல்வதற்கு ஒரு வழியும், வெளியே வருவதற்கு ஒரு வழியும் உள்ளது. இதில், பஸ்கள் வெளியே வரும் வழியில், ஆபத்தான வளைவுகள் கொண்ட பகுதியில் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மோட்டார் சைக்கிள்களில் வந்த பலர் தடுமாறி விழுந்து காயம் அடைந்துள்ளனர். எனவே சாலையோரத்தில் வைக்கப்பட்ட பொருட்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்