சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-10-23 12:49 GMT
கடலூர் இம்பீரியல் சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும் பல்லாங்குழி போல் காணப்படும் இந்த சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும், சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்