தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் முத்துப்பேட்டை சாலையில் மயில்பாளையம் திரும்பும் இடத்தில் சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். . மழைநீர் தேங்கினால் பள்ளம் இருப்பது தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை