தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணாநகர் அருகே சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்வதால் மழைநீர் தேங்கி நின்று சேறும் ,சகதியுமாக காட்சியளிக்கிறது.மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அண்ணாநகர்