மயிலாடுதுறை ரெயில் நிலையம் அருகே கிட்டபா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் குளம் போல் காணப்படுகிறது. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - பொதுமக்கள்,மயிலாடுதுறை.