பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள காரை பிரிவு ரோட்டில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. இதில் சிலர் உயிரிழந்தும் வருகின்றனர். இதேபோல் ஒரு சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். எனவே இதுபோன்ற விபத்துகள் இனி நடைபெறாமல் இருக்க இப்பகுதியில் தடுப்பு அமைக்க வேண்டும். இல்லை என்றால் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.