கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2022-10-16 12:19 GMT

திருச்செந்தூர்- பாளையங்கோட்டை இடையே சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஆழ்வார்திருநகரி- தென்திருப்பேரை இடையே சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் சாலையோர பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்