சிவகங்கை மாவட்டம் இளையான்குடி-மறவமங்கலம் மாநில நெடுஞ்சாலையில் கீழத்துறையூரிலிருந்து மேலத்துறையூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.