மயிலாடுதுறை ஆலமரத்தடி பனந்தோப்பு சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அந்த குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் மழைக்காலங்களில் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.