சாலை சீரமைக்கப்பட்டது;"தினத்தந்தி"க்கு பாராட்டு

Update: 2022-10-02 14:49 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரி கோவிலில் இருந்து ஆற்றங்கரை செல்லும் சாலை குண்டும்,குழியுமாக இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் இருந்த குண்டும்,குழியுமான சாலையை சீரமைத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.



மேலும் செய்திகள்

சாலை வசதி