கோவை சவுரிபாளையம் முருகன் கோவில் அருகே புலியகுளம் செல்லும் வழியில் சாலையின் குறுக்கே சாக்கடை கால்வாய் செல்கிறது. இது உடைந்து உள்ளதால், சாலையும் உடைந்து காணப்படுகிறது. மேலும் அங்கு சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இது தவிர குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பீதியுடன் மக்கள் நடந்து செல்லும் நிலை இருக்கிறது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.