கோவை கோவைப்புதூர்-பேரூர் சாலையில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டன. ஆனால் அதற்காக பெயர்க்கப்பட்ட இடங்களில், மீண்டும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைந்து செல்லும் நிலை காணப்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கிறது. எனவே சாலையை உடனடியாக சீரமைத்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.