ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள நாச்சியப்பா 2-வது வீதியில் இருந்து முதலாவது வீதிக்கு செல்லும் ரோட்டின் வளைவில் ஒரு பெரிய பள்ளம் பல நாட்களாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே பள்ளத்தை மூட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.