நீடாமங்கலம் வழியாக சரக்கு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் தினமும் சென்று வருகின்றன. இதற்காக நீடாமங்கலம் ரெயில்வே கேட் மூடப்படுகிறது. அப்போது சாலையில் இரண்டு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பின்னர் ரெயில்வே கேட்டை திறந்தவுடன் வாகனங்கள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்கின்றன.போக்குவரத்து நெருக்கடியை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஒரே ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் மட்டுமே பணியில் உள்ளதால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது சிரமமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகனஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வாகனஓட்டிகள் நலன்கருதி நீடாமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் கூடுதல் போலீசாரை நியமிக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.