கோபியை அடுத்த கரட்டூரில் இருந்து பாரியூருக்கு செல்ல ரோடு ஒன்று உள்ளது. அந்த ரோட்டின் தொடக்கத்தில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.