கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் இருந்து திருஞானசம்பந்தம் சாலை சந்திப்பு பகுதிக்கு செல்லும் சாலை சிதிலமடைந்து பள்ளம் ஏற்பட்டு கிடக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.