ஈரோடு-கரூர் நெடுஞ்சாலையில் பாலமலை செல்லும் பிரிவு சாலை எதிரே பழமாபுரம் செல்லும் தார் சாலை செல்கிறது. தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை நெடுகிலும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த தார்சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்களும், லாரிகள், கார்களும் சென்று வருகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.