அரியலூர் மாவட்டம், தா பழூர் ஒன்றியம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள காசாங்கோட்டையில் இருந்து சிவன் கோவில் வரை செல்லும் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.