நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை வேலைகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, பாவூர்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் நான்கு வழிச்சாலையில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பகுதியில் பெரிய குழாய்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது. பின்னர் அதில் சரியாக தார் போடாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுகின்றனர். எனவே, பள்ளத்தை மூடி தார் போடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?