கடலூர் மாநகரத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சிலர் கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலையில் தினசாி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாநகர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். விபத்துகளும் ஏற்பட்டு வருவதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.