கோத்தகிரி கேர்பன் கிராமத்தில் இருந்து புது கோத்தகிரி செல்லும் சாலை சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்து சிறிது தொலைவிற்கு சாலையின் இருபுறமும் கான்கிரீட் போடப்படாததால் சாலை பழுதடைய தொடங்கி உள்ளது. இதனால் அரசு பணம் வீணாகும் நிலை காணப்படுகிறது. இது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்த சாலையை பாதுகாக்கும் வகையில் கான்கிரீட் போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.