பாலம்பள்ளம் பேரூராட்சி மிடாலக்காடு-மிடாலக்குளம் சாலை தற்போதுதான் போடப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. சாலை தொடங்கும் மிடாலக்காடு சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை மிகவும் உயரமாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வேகத்தடையில் உரசி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் அந்த பகுதியில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் வேகத்தடையின் உயரத்தை குறைத்து விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
-பொன்.சோபனராஜ், மிடாலக்காடு.