அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தத்தனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொட்டக்கொல்லை கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மண் சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக மாறியுள்ளதுடன், ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.