சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பள்ளக்காட்டில் இருந்து புங்கவாடி செல்லும் சாலை சுமார் 2 கி.மீ. தூரம் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இவ்வழியே தினமும் சென்று வரும் நூற்றுக்கணக்கான வாகனங்களும், கெங்கவல்லி அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.