சாலையில் குழிகள்

Update: 2022-09-26 13:51 GMT

கோவை பாலசுந்தரம் சாலையில் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம் முன்புறம் இரு நுழைவு வாயில்கள் உள்ளன. இந்த வாயில்களின் முன்பு சாலையின் நடுவே குழிகள் இருக்கிறது. இந்த மரண குழிகளால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பி செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இந்த மரண குழிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்