கடலூர் கம்மியாம்பேட்டையில் இருந்து ஜாவான்ஸ் பவன் வரை உள்ள சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதிக வாகனங்கள் செல்லும் இந்த சாலை ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, அங்கு இருவழிச்சாலை அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.