சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் குடிநீர் குழாயை சரி செய்வதற்காக குழி தோண்டப்பட்டு பல மாதங்களாக அப்படியே கிடப்பில் இருந்தது. இதையடுத்து குழியை மூட அந்த இடத்தில் மண் கொட்டப்பட்டது. ஆனால் இதுவரை குழியை மூடாமல் அப்படியே மண் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வளைவில் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த குழியை மூடி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.