மயிலாடுதுறை கடக்கம் ஊராட்சி பனையக்குடி பகுதியில் உள்ள மயானத்துக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இதனால் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன்காரணமாக இறந்தவர்களின் உடலை சேற்றில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மயனாத்துக்கு செல்ல முறையான சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?