சென்னை அண்ணா நகரில் உள்ள பாடிகுப்பம் சாலை கேபிள் வயர் போடுவதற்கு பள்ளம் வேலை நடைபெற்றது. இந்த வேலை முடிந்த பின்னரும் அப்பகுதியில் தார் சாலை போடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்.