பூதலூர் தாலுகாவில் வெண்டயம்பட்டியில் இருந்து ராயமுண்டான்பட்டி சாலையில் பள்ளம் தோண்டி குழாய் பதித்துள்ளனர். இந்தநிலையில் சாலையில் பள்ளத்தை சீரமைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். .இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராயமுண்டான்பட்டி கிராம மக்கள்