கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் இருந்து மின் நகருக்கு செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோட்டின் தொடக்கப்பகுதி கற்கள் பெயர்ந்து கரடு, முரடாகவும், சற்று மேடாகவும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. அந்த ரோட்டின் வளைவில் இரு சக்கர வாகனங்கள் திரும்பும்போது சறுக்கி விடுகின்றன. இதனால் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே அந்த ரோட்டை சீரமைத்து தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.