நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் லவ்டேல் மற்றும் குன்னூர் சந்திப்பு பகுதிக்கு முன்னால் வலதுபுறம் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்கள் அந்த பள்ளத்தில் சிக்கி பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோரம் உள்ள அந்த பள்ளத்தை சரி செய்ய உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.