குண்டும்,குழியுமான சாலை

Update: 2022-09-22 11:10 GMT

மயிலாடுதுறை மாவட்டம் வடகரை, கழனிவாசல் பகுதியில் உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுகிறது. அதுமட்டுமின்றி குண்டும்.குழியுமான சாலையினால் வாகனஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

சாலை வசதி