பள்ளம் மூடப்படுமா?

Update: 2022-09-21 13:30 GMT


தஞ்சை 28-வது வார்டுக்குட்பட்ட மருதையாபிள்ளைத்தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த நிலையில் பள்ளம் மூடப்படாததால் இந்த பகுதி மக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி செல்லும்,மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்