ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில் பல்வேறு இடங்களில் நடைபாதைகள் சேதம் அடைந்து கிடக்கிறது. இதனால் சரக்குகள் கொண்டுவரும் வியாபாரிகள் மற்றும் பொருட்கள் வாங்க ஒரு பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதேபோல் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் தவறி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே பழுதான நடைபாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.