கோவை செல்வபுரம் வடக்கு மற்றும் தெற்கு ரோடுகள், சிவாலயா சந்திப்பு பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்கிறது. இதேபோல் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதனால் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தரமான தார்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.